
தியானம் என்பது ஓர் எல்லையற்ற பொருளின் மீது, சிரமமின்றி கவனம் செலுத்துவதாகும்.

பற்றுறுதி என்பது, அழியக் கூடியதை அழிவற்ற உன்னதத்துடன் இணைக்கும், ஜீவனுள்ள ஒரு பிணைப்பாகும்.

மகிழ்ச்சி என்பது, வெளிப்புற காரணிகளை சார்ந்திருப்பதல்ல. இவ்வாறு புற விஷயங்களைச் சார்ந்திருப்பதை, நிலையான மகிழ்ச்சியைத் தரக்கூடிய மேலான ஒன்றைக் கொண்டு நாம் சமன்செய்ய வேண்டும்.

இதயத்தின் மூலமாக மட்டுமே, நமது உயர்ந்த ஜீவிதத்துடன் நம்மை இணைத்துக்கொள்ள முடியும். எனவே, இதயத்தின்மீது தியானம் செய்வதில் ஒரு மகத்தான விவேகம் அடங்கியுள்ளது.

ஆன்மீக பயிற்சியில் ஈடுபடும்போது, லட்சியத்தை எப்போதும் நமது பார்வையிலேயே வைத்திருக்க வேண்டும். இதற்கு கடின உழைப்பு அவசியமானது. எனினும் இதயபூர்வமான உணர்வும், ஈடுபாடும் அதே அளவு அவசியமானதுதான். நிர்பந்தத்தால் விளையும் கடின உழைப்பில் எவ்வித பலனும் இல்லை.

அடிபணிதல் மற்றும் பொறுத்துக்கொள்ளுதல் போன்றவற்றிற்கான பயிற்சிக் களம் இல்லமேயாகும். அதுவே தவம் மற்றும் தியாகத்தின் மிகப்பெரிய வடிவமாகும்.

ஹார்ட்ஃபுல்னெஸ் என்பது விழிப்புணர்வை பற்றியது, அன்புடனும் பாசத்துடனும் கூடிய விழிப்புணர்வை பற்றியதாகும்.

உங்களது ஆர்வங்களுக்கு ஏற்ப, உங்கள் வாழ்க்கை முறையை சரிசெய்து கொள்ளுங்கள்.

ஆன்மீகத்தை நாடுபவர், எப்படிப்பட்ட மனிதராக இருக்கவேண்டும்? ஆன்மீகத்தை நாடும் ஒருவர், உலகின் வசீகரங்களுக்கு குருடராகவும், ஒரே மெய்பெருளின்மீது, ஒரே நோக்கத்தின்மீது ஈர்ப்புடையவராகவும், லட்சியத்தை அடைய அவருக்கு உதவக்கூடிய அந்த ஒன்றை பற்றிய சிந்தனையையே எப்போதும் கொண்டவராகவும் இருப்பார்.

ஆசைகளிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதற்கான ஒரே வழி, அவற்றிலிருந்து கவனத்தை விலக்கி, உன்னத மெய்ப்பொருளின் மீது நம் பார்வையை நிலைநிறுத்துவதேயாகும்.

அன்பு, ஏற்றுக்கொள்ளுதல், பணிவு, சேவை, கருணை, பரிவுணர்வு, எல்லாவற்றிற்கும் மேலாக ஜீவிதத்திற்கான உயரிய நோக்கம், இவையே ஹார்ட்ஃபுல்னெஸ் தியானத்தின் மூலம் கிடைக்கக் கூடிய சில பண்புகளாகும்.

இத்தனை வருடங்களில் நான் கற்றுக்கொண்ட அழகானதொரு விஷயம், 'அன்பு கவர்ந்திழுக்கும்' என்பதாகும். கடினமான இதயமும், கடுமையான முகமும் கொண்டவர்கள், அருளாசியைத் தடுத்து நிறுத்துகிறார்கள். அதேநேரம், மகிழ்ச்சியான இதயத்தை கொண்டவர்கள், எளிதாகவும் இயல்பாகவும், அருள் மழையை கவர்ந்திழுக்கிறார்கள்.

அனைத்தும் பயிற்சியிலிருந்துதான் தொடங்குகிறது. நாளடைவில், பயிற்சி வாழ்க்கை முறைக்கும், வாழ்க்கை முறை விதியை நோக்கியும் வழிவகுக்கிறது.

பற்றில்லாமல் அன்பு செலுத்த கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் பற்றுதான் நம்மை துன்புறுத்துமே அன்றி அன்பு அல்ல.

பிறரிடம் அன்பை தூண்டும் வகையில் உண்மையை பேச முயலுங்கள்.

அன்பும் பக்தியும் நிறைந்த இதயத்துடன் அளிக்கும் பிரார்த்தனை, ஒருபோதும் கேட்கப்படாமல் போகாது.