மனம் இணக்கமான நிலைக்கு வரும்போது, சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அதன்மீது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது, அதோடு மனதில் எவ்வித குழப்பமும் இருக்காது.
பாபூஜி
June 29th 2022
இதயத்தின் மூலமாக மட்டுமே, நமது உயர்ந்த ஜீவிதத்துடன் நம்மை இணைத்துக்கொள்ள முடியும். எனவே, இதயத்தின்மீது தியானம் செய்வதில் ஒரு மகத்தான விவேகம் அடங்கியுள்ளது.
தாஜி
June 28th 2022
நற்பண்பே ஆன்மீகத்தின் உயிர்த்துடிப்பாகும்.
லாலாஜி
June 27th 2022
இதயம் அமைதியாக இருக்கும்போது, மனம் ஓய்வு பெறும்.
தாஜி
June 26th 2022
கற்களுக்கு இடையே மலர் மலர்ந்திருந்தாலும், அது எங்குள்ளது என்பதை தேனீ கண்டறிந்துவிடும். அம்மலர்களைபோல் நமது இதயங்களை நாம் எவ்வாறு மாற்றுவது?
தாஜி
June 25th 2022
ஆன்மீகம் என்பது பயம் மற்றும் சபலத்திற்கு அப்பாற்பட்டது.
பாபூஜி
June 24th 2022
விமர்சனத்திற்கு கோபமோ, வருத்தமோ தெரிவிக்காமல், அதனை வரவேற்று, உங்களை திருத்திக்கொள்ள பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
சாரிஜி
June 23rd 2022
தியானம் என்பது ஓர் எல்லையற்ற பொருளின் மீது, சிரமமின்றி கவனம் செலுத்துவதாகும்.
தாஜி
June 22nd 2022
பிரார்த்தனையால் உருவாகும் பேரார்வமும் ஏக்கமும், ஆழமான தியானத்தில் தானாக தெளிவு பெறுகிறது.
தாஜி
June 21st 2022
குழந்தைகள் நிலைக்கண்ணாடியை போன்றவர்கள், ஏனெனில் நாம் எவ்வளவுதான் மறைக்க முயற்சித்தாலும் உண்மையினை உணர்ந்து கொள்ளும் தனித்துவமான திறன் குழந்தைகளுக்கு உண்டு.
சாரிஜி
June 20th 2022
ஒரு வீட்டை நாம் கட்ட முயலும்போது, செங்கற்களை ஒழுங்கற்ற முறையில் தாறுமாறாக அடுக்கி வைப்பதால் என்ன பயன் விளையும்?
பாபூஜி
June 19th 2022
இயற்கையின் நியதிப்படி, அனைத்துமே அதன் மூல ஆதாரத்திற்கு திரும்பிச் செல்ல முனைகின்றன.
மகிழ்ச்சி என்பது, வெளிப்புற காரணிகளை சார்ந்திருப்பதல்ல. இவ்வாறு புற விஷயங்களைச் சார்ந்திருப்பதை, நிலையான மகிழ்ச்சியைத் தரக்கூடிய மேலான ஒன்றைக் கொண்டு நாம் சமன்செய்ய வேண்டும்.
தாஜி
June 16th 2022
அகங்காரத்தை விவேகத்துடன் பயன்படுத்தினால், அது நமக்கு பெரிதும் உதவுகிறது. ஆனால் சுயநல நோக்கங்களுக்காக பயன்படுத்தும்போது, நாம் ஆணவமுடையவராக, சுய-முக்கியத்துவம் பாராட்டுபவராக ஆகிறோம்.
தாஜி
June 15th 2022
ஒவ்வொரு படியிலும், ஒவ்வொரு தருணத்திலும், எனது குறைகளை கண்டறிந்து, அவற்றை சரிசெய்து கொள்வதற்கு, நான் என்னையே பார்த்துக்கொள்ளும், துணிவு உடையவனாக இருக்க வேண்டும்.
தாஜி
June 14th 2022
இதயத்தில் உள்ள மொத்த அன்பையும், எனது செயல்கள் அனைத்திலும் நான் உட்செலுத்த வேண்டும்.
தாஜி
June 13th 2022
அன்பிற்குரியவரோடு நீங்கள் இருக்கும்போது, நீங்கள் வெற்றிபெற்றாலும் தோல்வியுற்றாலும், அது ஒரு பொருட்டே அல்ல.
தாஜி
June 12th 2022
பிடிவாதத்தை நீக்கி, வளைந்து கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். பிறகு ஆன்மீகத்தில் உங்களால் எவ்வளவு விரைவாக முன்னேற முடியும் என்பதை பாருங்கள்.
தாஜி
June 11th 2022
தயாராகவும், தக்க முன்னேற்பாட்டுடனும், தகுதியுடனும் உள்ள இதயம், அருள், அன்பு மற்றும் ஆசிகளை கேட்காமலேயே கவர்ந்திழுக்கும்.
தாஜி
June 10th 2022
மிதத்தன்மையை வளர்த்துக்கொள்வதற்கு, நமது உள்முக மற்றும் வெளிப்புற வாழ்க்கை முறை, இவை இரண்டிலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.
பாபூஜி
June 9th 2022
நமக்கு தேவையான அனைத்தும் ஏற்கனவே நம்முள் இருக்கின்றது.
தாஜி
June 8th 2022
நீங்கள் எதை செய்தாலும், அதை உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் செய்ய முயலுங்கள்.
தாஜி
June 7th 2022
எல்லையற்றதில் இருந்து எதை பிரித்தெடுத்தாலும், அதிலும் அந்த மூலத்தின் சாராம்சம் உள்ளடங்கியிருக்கும், ஆகையால் அதனுள்ளும் எல்லையற்ற தன்மை பொதிந்திருக்கும்.
பாபூஜி
June 6th 2022
அனைத்தும் பயிற்சியிலிருந்துதான் தொடங்குகிறது. நாளடைவில், பயிற்சி வாழ்க்கை முறைக்கும், வாழ்க்கை முறை விதியை நோக்கியும் வழிவகுக்கிறது.
தாஜி
June 5th 2022
ஆன்மீகப் போர்க்களத்தில், கவசத்துடன் வருபவர்களுக்கே, ஆன்மீகம் ஒதுக்கப்பட்டுள்ளது. வாளுடன் வருபவர்களுக்கு அல்ல.
பாபூஜி
June 4th 2022
பிறரிடம் அன்பை தூண்டும் வகையில் உண்மையை பேச முயலுங்கள்.
தாஜி
June 3rd 2022
அன்பை பற்றி சிந்திப்பது தியானமல்ல, அன்பை உணர்வதே தியானமாகும்.
தாஜி
June 2nd 2022
யாரிடமாவது ஏதேனும் குறையைக் கண்டால், அதிலிருந்து அவர்கள் விடுபட வேண்டுமென பிரார்த்தனை செய்யுங்கள்.
லாலாஜி
June 1st 2022
இதயத்தில் அமைதி இருந்தால்தான், அதனை வெளியில் உருவாக்க முடியும்.