இதயம் நிறைவாக இருக்கும்போது, மனதால் தெளிவுடனும் விவேகத்துடனும் ஆழ்ந்து சிந்திக்க முடிகிறது.
தாஜி
March 30th 2021
முறையாக செய்யப்படும் தியானம், ஓர் உள்நிலையை உருவாக்குகிறது, அந்த உள்நிலை உங்களையே மாற்றுகிறது.
தாஜி
March 29th 2021
சுய மரியாதையில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, மற்றவர்களுக்கு மரியாதை அளிப்பதில் அக்கறை கொள்வோம்.
தாஜி
March 28th 2021
விதியைப் பற்றிய முதல் கோட்பாடு என்னவெனில் அதை நிகழ்காலத்தில் மட்டுமே மாற்ற இயலும்.
தாஜி
March 27th 2021
இந்த பிரபஞ்சத்தில், மாற்றம் மட்டுமே நிரந்தரமானது.
சாரிஜி
March 26th 2021
தியானம் செய்யும் இதயத்தில் அன்பு உச்ச நிலையில் பிரகாசிக்கும்போது, அது ஸ்பரிசிப்பவை அனைத்தும் உயர்வடைகின்றன.
தாஜி
March 25th 2021
நமது லட்சியத்தை அடைவதற்காக நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், நமது மனோசக்தி மென்மேலும் வலுபெறுகிறது.
தாஜி
March 24th 2021
பிரச்சினைகள் அனைத்தையும் மகிழ்ச்சியுடனும், களிப்புடனும் ஏற்றுக்கொள்ளுங்கள். அதன்பிறகு அது வெளிப்படுத்தும் அழகை பாருங்கள்.
தாஜி
March 23rd 2021
இதயங்களை அன்பினால் மட்டுமே வெல்ல முடியும். வேறு வழியேதும் இல்லை.
லாலாஜி
March 22nd 2021
அன்பும் பக்தியும் நிறைந்த இதயத்துடன் அளிக்கும் பிரார்த்தனை, ஒருபோதும் கேட்கப்படாமல் போகாது.
பாபூஜி
March 21st 2021
சமநிலையற்ற மனம், அதன் திசையையும், திசைகாட்டியையும் இழக்கிறது.
தாஜி
March 20th 2021
கோபத்தை வெளியில் காட்டாமல், நீங்கள் மாறுவதற்கு அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தாஜி
March 19th 2021
மனசாட்சி என்பது அகக்குரலே அன்றி வேறல்ல.
சாரிஜி
March 18th 2021
அடிமைத்தளை என்பது நம் மனதிலும், கருத்துகளிலும், திடநம்பிக்கைகளிலும் உள்ளது.
லாலாஜி
March 17th 2021
அன்பு, அன்பிற்குரியவருக்கு சுதந்திரத்தை அளிக்கட்டும். கூட்டைவிட்டு பறந்து செல்லும் பறவை திரும்ப வந்துவிடுவதும் உண்டு.
சாரிஜி
March 16th 2021
மனம் இணக்கமான நிலைக்கு வரும்போது, சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அதன்மீது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது, அதோடு மனதில் எவ்வித குழப்பமும் இருக்காது.
பாபூஜி
March 15th 2021
இதயத்தின் உள்முக பற்றுறுதியில் இருந்து உருவாகும் மனப்பான்மையே நம்பிக்கையாகும்.
சாரிஜி
March 14th 2021
யாரிடமாவது குறைபாட்டை கண்டால், அவர்கள் அதிலிருந்து விடுபட பிரார்த்தனை செய்யுங்கள்.
பாபூஜி
March 13th 2021
மிதத்தன்மையை வளர்த்துக்கொள்வதற்கு, நமது உள்முக மற்றும் வெளிப்புற வாழ்க்கை முறை, இவை இரண்டிலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.
பாபூஜி
March 12th 2021
நல்ல இதயம், கருணை மிக்க உணர்வுகள் மற்றும் சமநிலை கொண்ட மனம், இவை நற்பண்பின் அடித்தளமாக உள்ளன.
லாலாஜி
March 11th 2021
உங்களுக்குள்ளேயே இணக்கம் இல்லாதபோது, எவ்வாறு மற்றவர்களுடன் சேர்ந்து குழுவாக வேலை செய்ய இயலும்? முதலில், உங்கள் இதயத்துடன் இணங்கி வேலை செய்ய கற்றுக்கொள்ளுங்கள். பின், ஒரு குழுவாக வேலை செய்யுங்கள். அதன்பிறகு, ஓரே இதயமாக இணைந்து வேலை செய்யுங்கள்.
தாஜி
March 10th 2021
மனிதர்களாகிய நாம் அனைவரும் குறைபாடு உள்ளவர்களே. குறைபாடுள்ள இருவர் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும்போது, அங்கு முரண்பாடு உருவாவது இயல்பானதே.
தாஜி
March 9th 2021
ஒன்றுசேர்ந்து வேலை செய்வதில் உள்ள ஆனந்தத்தை பகிர்ந்து கொள்ளும்போது, உங்கள் உணர்வுறுநிலை விரிவடையும்.
தாஜி
March 8th 2021
நம்பிக்கையை மீண்டும் உருவாக்கும் அமைதி நிலையிலும், தக்க தருணத்தில் வரும் விழிப்புணர்வு நிலையிலும், இதயம் பேசுவதை உணர முடியும்.
தாஜி
March 7th 2021
அன்பு அனைத்தையும் சுலபமாக்குகிறது.
பாபூஜி
March 6th 2021
முழு நிலவு எவ்வளவு அழகானதாக இருந்தாலும், சூரியனின்றி அது இருக்க முடியாது.
சாரிஜி
March 5th 2021
மனதின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி, நாம் தியானத்தில் செய்வதைப் போன்று, நமது மனதை ஒரு புனிதமான எண்ணத்தின் மீது நிலைநிறுத்துவதுதான்.
பாபூஜி
March 4th 2021
எது உண்மையான அன்பு? அன்பர், அன்புக்குரியவர் மற்றும் அன்பு ஆகிய மூன்று அம்சங்களும் மறைந்துவிடக்கூடிய ஒரு நிலையே அது.
லாலாஜி
March 3rd 2021
மென்மேலும் அன்பு செலுத்துவதின் மூலம், நீங்கள் அன்பை இழப்பதில்லை, இன்னும் அதிக அன்பையே பெறுகிறீர்கள்.
சாரிஜி
March 2nd 2021
ஆற்றல் வாய்ந்த தியானமானது, தியானிப்பவரை உயர் உணர்வுறுநிலை எனும் எல்லையற்ற வானின் உயரத்திற்கு அழைத்துச் செல்வதோடு, ஆழ் உணர்வுறுநிலை எனும் ஆழ்கடலில் மூழ்கி, விவேகம் மிக்கவராக வெளிப்படவும் உதவிபுரிய வேண்டும். இதன்மூலம் நமது உணர்வுறுநிலை பரிணாம வளர்ச்சி அடைகிறது.
தாஜி
March 1st 2021
யோகா என்பது ஒரு வழிமுறை, திறன்மிக்க சுயம் அதன் விளைபயன்.